என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 28

​ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் . பல பண்பட வைத்திருக்கும் ..சில புண்படவும் வைத்திருக்கவும் . ஒருசில அவரவர்க்கு பாடங்களாக ​மாறியும் இருக்கும் . வாழ்க்கைதான் அனுபவம்...அனுபவம்தான் வாழ்க்கை.

அதைப்போல என் வாழ்க்கைப் பயணத்தில் நான் கண்ட சிலவற்றை , ஏற்பட்ட அனுபவத்தை இதுவரை என்னால் நினைவுகூர முடிந்த அளவிற்கு தொகுத்து உங்கள் பார்வைக்கு வைத்தேன் .

இன்னும் என் பயணம் எதுவரை என்று தெரியவில்லை ....இலக்கிலாப் பயணத்தின் இறுதியும் தெரியாது . நிரந்திரமிலா வாழ்வில்தான் நாம் சந்திக்கும் மனிதர்கள் , நிகழ்வுகள் , போராட்டங்கள் , மகிழ்வூட்டும் தருணங்கள் , களிப்பூட்டும் காட்சிகள் , அல்லல்படும் வேளைகள் , துயரப்படும் நிகழ்ச்சிகள் , அழுதிடும் நேரங்கள் , நம்மைவிட்டுப் பிரியும் உறவுகள் , நண்பர்கள் , அறிந்தவர்கள் , சமுதாய சிற்பிகள் , அரசியல் தலைவர்கள் , பல்வேறுத் துறையை சார்ந்த வல்லுனர்கள் . இப்படி நாம் மறக்க முடியாமல் உள்ள மன நிலை , சூழ்நிலை , அவ்வபோது மாறிடும் நம்முடைய பொருளாதார நிலை , உடல்நிலை .....அனைத்தும் நிறைந்த நம் வாழ்க்கைப் பயணம் , அனுபவத்தின் சாரல்கள் என்றும் நம் நெஞ்சில் நிலைத்து இருக்கும் .

எழுத்து . காம் வலைதளத்தில் ஏதோ ஒரு கட்டுரைத் தொடர் எழுத நினைத்து முடிக்கும் தறுவாயில் உள்ளேன் .
இனியும் தொடரப்போகும் என் பயணத்தில் நிகழ்ந்தவைகளை திரும்பிப் பார்த்தும் , மனதில் அசைப்போட்டும் , நிகழ உள்ளவைகளை எண்ணிப் பார்த்தும் நடை போடுகின்றேன் . பிறப்பு என்றாலே இறப்பும் நிச்சயம்தானே . எந்த நிலையிலும் நாம் எதற்கும் நம்மை தயார் நிலையில் இருக்கவேண்டும் . எதையும் சந்திக்க மனோதிடத்துடன் இருக்க வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் வாக்குப்படி , குறையேதும் இல்லா வாழ்வே நமக்கு என்றும் பெருஞ்செல்வம் என்று நினைத்து செயல்பட வேண்டும் .

இவ்வுலகில் உள்ளவரை நம்மால் இயன்றளவு அடுத்தவர்க்கு உதவிட வேண்டும் , பயன்படுதல் வேண்டும். ஒன்றும் இல்லாமல் வருகின்ற நாம் ஒன்றும் எடுத்து செல்வதும் இல்லை . இதை உணர்ந்தாலே நம் வாழ்க்கை செம்மைப்படும் .

இதுவரை பொறுமையுடன் இக்கட்டுரைத் தொடரை வாசித்த அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நம் மொழியை காக்கவும் வளர்க்கவும் பாடுபடுவோம் . இனமான உணர்வும் தழைத்தோங்கட்டும் . வருங்கால தலைமுறைக்கு எனது வாழ்த்துக்கள் .

எனை என்றும் ஆதரிக்கும் , அரவணைக்கும் எழுத்து .காம் தளத்திற்கும் , நிர்வாகிகளுக்கும் , தள உறுப்பினர்களுக்கும் , எனது நட்பு வட்டத்திற்கும் வாழ்த்துக்கள் , நன்றிகள் உரித்தாகுக .

வாழ்க தமிழர் .. வெல்க தமிழ் !

மீண்டும் சந்திக்கிறேன் ....

பழனி குமார்
29.01.2016

எழுதியவர் : பழனி குமார் (29-Jan-16, 4:06 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 447

மேலே