அக்பர் பீர்பால் புது கதைகள்

அக்பரின் அரண்மனை மணி ஓசையை யாரோ ஒருவர் ஒலித்துக் கொண்டிருந்தார் ,

வந்தருப்பது பெரும் புலவர் ,அக்பர் புலவரை சகல மரியாதைகளுடன் உபசரித்தார்,

பீர்பாலை பற்றி கேள்வி பட்ட புலவர் பீர்பாலை சோதிக்க விரும்பினார்,இதனை அக்பரும் ஏற்றார்,

பீர்பால் அரசைவக்குள் வந்தார் , புலவர் பீர்பாலிடம் நீ என்ன அவ்வளவு புத்திசாலியா,அதையும் பார்ப்போம் ,நான் விடுக்கும் சவாலில் நீ தோற்றால் அரசவையை விட்டே வெளியேறிட வேண்டும் உன் பதவியும் பறிக்கப் படும் என்றார்,சவாலை பீர்பாலும் ஏற்றார் ,

,....கதையை முழுவதுமாக படியுங்கள்,,

சென்ற முறை கோட்டை தொடாமலே அருகில் கோடு வரைந்து வெற்றி கொண்டாய்,

(முழுவதுமாக படியுங்கள்)

ஆனால் ,இந்த முறை நான் வரையும் கோட்டை தொடாமலே அந்த கோட்டின் சுவற்றை தொடாமலே நான் வறையும் கோட்டை நீ பெரிதாக்க வேண்டும் ,சிறிதாக்கவும் வேண்டும் என்றார் ,பீர்பாலும் சவாலை ஏற்றார்,

அதன் படி புலவர் சுவற்றில் ஒரு சிறிய கோட்டை வறைந்தார்,

சிறிது நேரம் யோசித்த பீர்பால் ,அரசே இரவு வரை காத்திருக்க வேண்டும் பிறகு நான் சிறிதாக்குகிறேன் என்றார் ,பீர்பாலும் ஏற்றார்,

இரவானது, பீர்பால் அரண்மனையில் எறியும் வெளிச்சங்களைை அனைக்க சொன்னார் வெளிச்சமும் அனைக்கப் பட்டது ,அரண்மனை எங்கும் காரிருள்

ஒரு தீப்பந்தம் எடுத்து வரச் சொன்னார் தீப்பந்தமும் எடுத்து வரப் பட்டது,

பீர்பால் தீப்பந்தத்தை கோட்டின் அருகில் கொண்டு வர வர கோட்டின் நிழல் மிகப் பெரிதானது கோட்டின் நிழல் முன் கோடு மிகச் சிறிது போன்றானது,அதே போல் பீர்பால் தீப்பந்தத்தை கோட்டை விட்டு விளக்க கோட்டின் நிழல் மிகச் சிறிதானது,சின்ன நிழல் முன் கோடு பெரிது போன்றானது,

புலவர் பீர்பாலின் அறிவினை கண்டு வியந்து பாராட்டினார்,,


குறையையும் நிறையையும் கருத்தாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (29-Jan-16, 8:11 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 678

மேலே