கால் முளைத்த கற்பனை

அதிசயம்.. ஆனால் உண்மை..
ஊரெல்லாம் அதே பேச்சு..
"மழை இல்லா குளம் நீரால்
நிறைகிறது" யாருக்கும்
தெரியவில்லை குளம் நிறைய
காரணம்..
குளம் நிறைய காரணம் மீன்களின்
கண்ணீர் என்று கண்டுகொண்டான்
கடவுள். 'அனைத்தும் உனக்கிருந்தும்
நீ அழ காரணமென்ன' மீன்களிடம்
கேட்டான்
'எங்கள் எதிரி கொக்குகளுக்கும்
வெள்ளை நிறத்தை தந்து எளிதாய்
மறைந்து எங்களை பிடிக்க வாய்ப்பை
தந்த உன்னை நினைத்தே அழுகிறோம்'
என்றன மீன்கள்
'நீங்கள் கண்டு தெளியவே கொக்குகளின்
கால் நிறத்தை மாற்றி இருக்கிறேனே..
அதைக்கண்டு தப்பிடுங்க' என்றான்
கடவுள்..
'இது தெரியாமல் இத்தனை நாளாய்
கால் முளைத்த கற்பனைகளால் களங்கி
வீனடித்து விட்டோமே' என்று மீண்டும்
அழுதன மீன்கள்
'ஆறறிவைக் கொண்ட மனிதர்களே
கற்பனையில் மிதக்கும்போது ஓரறிவு
கொண்ட உங்கள் மீது குறையில்லை'
என்றான் கடவுள்
அத்தனையையும் கனவாய்க் கண்டு
விழித்த மனிதன் எழுந்தான்.. 'நாம
கடவுளையே.. கற்பனையில் தான்
பார்க்கிறோம்.. இதிலே கனவில் கருத்து
சொன்னால் கேட்போமா' என்றபடி
கைப்பேசியை எடுத்தவன் "மச்சி
ப்ரியா.. இப்ப வரியா.. "என்றபடி
தொடர்ந்தான் கற்பனை உலகில்..

எழுதியவர் : Moorthi (29-Jan-16, 9:24 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 238

மேலே