எனக்காக பிறந்தவளா 7

Episode 7 : எனக்காக பிறந்தவளா ???
அவளின் பிண்ணிய ஒற்றை கூந்தலின் அமைப்பு சுவாரசியாக இருந்தது . அதில் அவன் எண்ணங்கள் பிண்ணப்பட்டது . அதன் இட வல ஆட்டம் அவனுக்குள் தாலம் இசைத்தது . ஒவ்வொறு நொடியும் அவளை முழுமையாக ரசித்து நடந்தான் .
மாலைநேரம் சூரியன் தலை சாய்த்து , இருள் கார்களின் ஒளிக்கு வழி வகுத்து, விலகி சென்றது . signal-il வண்டிகள் சாலையில் ஒரு ஓரத்தில் தேங்கி நின்றது . வஸந்த் அவளை ரசித்துக்கொண்டுதான் இருந்தன் .
" என்ன வசந்த் silent ah வர "
" உன்ன பின்னாடி இருந்து ரசிச்சுனு வர மைதிலி "
" ஓய்ய்ய், என்ன இதலாம், very bad " என்று அவள் சிலிங்கினால் கண்கள் முறைத்தது கண்ணம் சிரித்தது .
" என்ன Expression மைதிலி , I love you (அவன் காதலோடு அவளை பார்த்ததான், அவள் பாவனை மறுவதற்குள்) my dear friend , i love you my dear friend " .
" friend நா (அவள் கைவிரல்ஒன்று அவனை குறிவைத்தது) , ok தான்" விரல் ஒன்று காற்றை tick செய்தது .
வசந்தின் வயிறு இறுகி மார்பு சட்டையை மூடியது,அவன் நரம்புகள் எழுந்து கைகளை கழுகின் சிறகு போல் ஒரு அமைப்பில் நிறுத்தினான் .
" அது போதும் டியர் "
" நீ ஆசப்பட்டாலும் அதுக்கு மேல கிடைக்காது "
கையை நெஞ்சில் வைத்து " அது போதும் my டியர் " மறுபடியும் காதலோடு .
"சரி ok ok , என்னோட hostel வர போது நான் போய்க்குற, Bye "
" தனியா உனக்கு bore அடிக்கும் நானும் வர "
"வேணா வசந்த் , நீ போ "
"ஏன் நான் வரக்கூடாத" வருத்தமாக.
" இல்ல வசந்த் நீ ரொம்ப love பண்ற அதான் பயமா இருக்கு"
" என்ன பத்தி கவல படாத எனக்கு இந்த feel இந்த oneside love பிடிச்சு இருக்கு, நான் என் love ah expose பண்ணுவ bcz நான் உன்ன அவ்ளோ பண்ற , நீ avoid பண்ண நான் hurt ஆகிடுவ , sure ah உனக்கு என்மேல love இல்லனா ஒரு friend ah என்ன மாத்த try பண்ணு, நானும் உன்ன லவ் பண்ணவைக்க lover ah try பண்ற, but ஒரு friend உன்ன hurt ஆகாம பாத்துக்குவ "
" சொன்ன புரிச்சுக்க வசந்த் ப்ளிஸ், நீ ஏன்ன பண்ணலும் நான் லவ் பண்ணமாட்ட, try பண்ணாத waste "
" சரி try பண்ணல நீயே ஒரு நாள் ஐ லவ் யூ வசந்த்னு சொல்லுவ அதுவரைகும் wait பண்ற "
" ஐ திங்க் உனக்கு நிறைய இம்மஜ்னெஷன் இருக்கு, but practical ah அது நடக்காது வசந்த் friend ah இருப்போம் "
"கண்டிபா friend ah இருப்போம்'
"எப்பவும் friend ah இருப்போம்".
கோவம் நெஞ்சை சுட்டது மெளனமாக நடந்தான். பேசிக்கொள்ளவில்லை .பெட்டிகள் போல வீடுகள் வீதியில் அடுக்கப்பட்டிருந்தது . இருள் நகரின் சாலையின் மேல்தளத்தில் படுத்துக்கொண்டிருந்தது .தெருவிளக்குகள் வீடுகளின் வெளிச்சம் எல்லாம் தெருவை அங்ககே அலங்கரிக்க . தெரு நாய்கள் தெருவை சொந்தம் கொண்டடியதை வெறுத்தான் கல் எரிய தோனியது .ஒரு ஒல்லி இளைஞன் மைதிலி பார்த்த விதம் அவன் கவனத்தை மாற்ற கல்லை அவன் மேல் எறிய உணர்வுகள் தூண்டியது, வலைவை கடந்து உள்ளே போனார்கள் .
"அதான் வசந்த் எனோட hostel"
" umm"
" நான் போகடுமா "
" umm"
"msg பண்ணு"
"umm"
" பாத்து போ வசந்த் "
சிரித்தான் .
"சிரிகாத ஒழுங்க வீட்டுக்கு போய் msg பண்ணு"
" umm"
கொஞ்சம் தொலைவு சென்று" sorry dear "என்று சொன்னாள் .
"டியர் சொன்ன convince ஆகிடுவான ?" (சத்தமாக) .
"சரி, ஐ லவ் யூ மை டியர் friend, Bye" என்றுஅவள் விடுதிக்குள் சென்றாள் .
காதளோடு அவளின் முகத்தை கடைசியாக பார்த்து சிரித்தான், அவளும் சிரித்தபடி திருப்பினாள் . கோவம் வெளிநாட்டை கடந்து இருந்தது . அவள் பின்னழகை காட்டிக்கொண்டு நகர்ந்ததை வெளிபுறக் கதவு வரை பார்த்தான் . ஒரு முறை வெளியே திரும்பி பார்ப்பாள் என்ற எதிர்பார்ப்பு வீதி திருப்பு வரை அவனிடம் இருந்தது .