தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து11---ப்ரியா

புகழும் பெயரும் பணமும் இருந்தால் ஆயிரம் பெண்கள் பின்னால வருவாங்க என்று வசந்த் பெண்களை இழிவுபடுத்திய இந்த பேச்சுக்கள் ரியாவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை இப்படி இருக்கிறானே எல்லாத்துக்கும் காரணம் பணத்திமிர்தான்!வந்தனா சொன்ன மாதிரி அதை அடக்கிவிட்டால் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும் அதன் பிறகு பெண்களை எப்படி அலட்சியம் செய்கிறான் என்று பார்க்கலாம்? இப்படி பட்டவன் நம் தோழிக்கு தேவையே இல்லை என்று மனதிற்குள் அவனை கடிந்து கொண்டாள்....!

ஆனால் இவளுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை ஏன் நம்மிடம் நல்லவனாய் நடந்து கொள்கிறான், வந்தனா சொன்னதை பார்க்கும் போது நம்மிடமும் இந்த நேரம் அவன் தவறாக பேசியிருக்கணுமே ஆனால் அவன் அப்படி எதுவும் நடந்து கொள்ளவோ,பேசவோ இல்லையே?சரி பார்ப்போம் நல்லவனாய் இருந்து வந்தனாவைப்போல் என்னையும் ஏமாற்ற நினைக்கிறான் விஷயங்கள் தெரிந்ததால நாம கொஞ்சம் உஷாராக இருக்கிறோம்,இதுவே இந்த இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் அவளுக்கும் வந்தனா கதிதான் என்று நினைத்தவள்......நைட் பார்ட்டிக்கு போக ரெடி ஆகுறேன் சார் என்றவள் உள்ளே குளிக்க சென்றாள்.......!

அவள் குளித்து முடித்து வருவதற்குள் வந்தனா 4முறை அழைப்புக்கொடுத்திருந்தாள்.
வந்ததும் இவள் பேசினாள்.

ஏய் சொல்லுடி என்று ரியா கேட்க?

அங்க எதுவும் ப்ராப்ளம் இல்லியே என்று முதல் கேள்வியாய் வந்தனா கேட்டாள்?இல்லடி ஒன்றுமில்லை.

ஆனால் நீ கவனமாக இரு அவன் ரொம்ப மோசமானவன் இப்பொழுது நல்லவன் மாதிரி இருப்பான் திடீரென அவனது சுயரூபத்தைக்காட்டுவான் கவனமாக நடந்துகொள் என்று எச்சரித்துவிட்டு தன்னுடைய திட்டத்தை சொல்ல ஆரம்பித்தாள்.......

அவன் ஏற்கனவே மிகவும் பிரபலமானவன்,இப்பொழுது மறுபடியும் இவ்வளவு பெரிய நம்ம நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் கொடிகட்டி பறக்கும் அளவுக்கு உச்சத்துக்கு போயிட்டான் இதற்கு மேல் நாம் அவனை கண்டுக்காமல் இருந்தால் அவன் என்னைப்போன்று இன்னும் பல பெண்களை ஏமாற்றிவிடுவான் அதுமட்டுமில்ல இந்தமாதிரி கொடூரன் அந்தஸ்தோடு இந்த உலகில் இருந்தால் அது நமக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஆபத்துதான் அதனால இவனை ஏதாவது செய்தே ஆகவேண்டும்டி......!

எனக்கும் அவன் தேவை இல்லை மற்ற பெண்களையும் இனி அவன் வலையில் விழவிடமாட்டேன் என்னைப்போல் யாரும் இனி ஏமாறக்கூடாது,சமூகத்தில் அவன் உயரவும் கூடாது அதற்கு முதல் வழிதான் இது!!!!!

என்னடி சீக்கிரமா சொல்லுடி என்றாள் ரியா?

முதலில் அவனது கௌரவத்தை அழிக்கவேண்டும்,அவனது ரகசியங்களை நமதாக்கிக்கொள்ளவேண்டும்....

முதலில் நீ செய்யவேண்டியது அவனது பைல்கள் அனைத்தையும் ஒரு copy எடுத்து எனக்கு மெயில் பண்ணிரு, அதன் பிறகு இப்பொழுது உள்ள இந்த வடிவமைப்பின் ரகசியங்களை உள்ளடக்கிய பைலையும் ஒன்று விடாமல் எனக்கு அனுப்பிரு அப்புறம் எப்படியாவது ஒரே ஒரு கையெழுத்து மட்டும் அவனிடமிருந்து வாங்கிரு மற்றதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று அழுத்தமாய் சொன்னாள்???

சரி நான் பார்த்துக்குறேன் எல்லாம் ஓகேடி அந்த கையெழுத்து மேட்டர்தான் எப்டி பண்றதுன்னு தெரில?

அதுக்கும் ஒரு காலம் வரும்டி கையெழுத்து அப்புறம் பார்த்துக்கலாம் மற்ற டிடைல்ஸ் எல்லாம் சரியான கோணத்தில் அவனுக்கு சந்தேகம் வராதபடி பார்த்துக்கோ?

சரிமா! ஆமாடி இதை வைத்து அவனது நிலையை எப்படி சீர்குலைக்க முடியும்????என்று புரியாமல் ரியா கேட்டாள்!

அதெல்லாம் நீ வந்த பிறகு சொல்றேன் அப்புறம் பேசுறேன் அவன் வந்துறப்போறான்.....உடம்ப பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு வைத்தாள்.......!

கீது சொல்வதை கேட்பதா?வந்தனா சொல்வதை கேட்பதா?இல்ல ஒரு முதலாளிக்கு நல்ல விசுவாசமாக இருந்து அவன் சொல்வதை கேட்பதா????????

வந்தனாதான்............

வந்தனாவுக்காகதான் இந்த இடத்துக்கே வந்திருக்கிறோம் அதனால வந்தனா சொல்றபடி கேட்பதுதான் சிறந்தது என்ற முடிவுடன்...."கொக்கு மீனை கவ்விக்கொள்ள தகுந்த காலத்தை நோக்கி இருப்பதை போல் இவளும் அந்த காலத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தாள்....??????

சிறிது நேரத்தில் அவனும் ரெடி ஆகி இருவரும் அந்த பிரபலமான நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர்.....

மற்ற நிறுவனத்தலைவர்களும் அங்கு கூடி இவனை வாழ்த்தி இவனது பார்ட்டியில் கலந்து கும்மாளமிட்டனர்!

இவள் மட்டும் தனியாக ஒரு இடத்தில் நிற்பதை பார்த்தான்.

திடீரென இவளை கவனித்தவன் போல் இவளது அருகில் வந்தான்........

சந்தன நிறப்புடவையில் வெண்மேகமும் கருமேகமும் குழைந்து செய்யப்பட்ட அழகிய கற்சிலை போல் ஆறடி குதிரைப்போல் ஒய்யாரமாய் நின்று அங்கிருக்கும் தண்ணிரையும் மீன்கள் நீந்தி செல்வதையும் ரசித்துக்கொண்டிருந்தாள் ரியா,பக்கத்தில் வந்தவன் பின்புறமாய் நின்று அவளை ரசித்துவிட்டு அவள் முன் வந்தான்...... அழகான கூந்தலில் அளவான பூ, அளவுக்கதிகமாய் இல்லாமல் அளவாய் மேக்கப் ஆடம்பரமாய் இல்லாமல் அடக்கமாய் இருந்தாள் மற்றவர் முகம் கோணாமல் ரசிக்கும் படி சேலையும் உடுத்தியிருந்தாள்..எந்த புடவை என்றாலும் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் அளவுக்கு அதிகமாய் பேசவோ?சிரிக்கவோ?மாட்டாள் இதழ்களுக்கு வலிக்காதது போல் மெல்லிய புன்னகை அதுதான் அவளுக்கு அழகாய் இருந்தது! திடீரென பார்க்கும் தருவாயில் படபடத்து அடிக்கும் பட்டாம் பூச்சியின் சிறகுகளைப்போன்ற இமைகள் என அவளது அழகை வைத்த கண் வாங்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் வசந்த்....!

அவனது பார்வை அவளை ஊடுருவாமல் இல்லை புரியாதது போல் நடித்து நிதானமாக புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டாள்?

நான் உங்கக்கிட்ட ஒன்று சொல்லணும்?என்ன சொல்லுங்க என்றாள்?நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது, இதுவரைக்கும் எந்த பொண்ணுமேலயும் இந்தமாதிரியான ஈர்ப்பு வந்தது இல்லை,உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா?என்று கேட்டான்!

அடடா! நரி ஊளையிட ஆரம்பித்துவிட்டதே.....

வந்தனா சொன்னது நினைவுக்கு வந்தவளாய்........என்கிட்ட நீங்க நினைக்கிறமாதிரி பணமோ?அந்தஸ்தோ?இல்லை சார் உங்கள மாதிரி பெரிய ஆளுங்க வான்னு சொன்னதும் வரதுக்கு நான் அந்த மாதிரி குடும்பம் இல்லை சார் என்று வந்தனாவை மனதில் வைத்துக்கொண்டு ஆவேசமாய் பேசினாள்....பார்வைகள் நெருப்பாய் தெறிக்க பார்த்தாள்.....

அவன் பதில் பேசாமல் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டான்!

ஏதோ பெரிதாய் வென்றவளாய் மனதிற்குள் சந்தோசப்பட்டுக்கொண்டாள் ரியா...!
அடுத்த வரும் நாட்களை பற்றி மனதில் நினைக்காமல் அவனைப்பெறுப்பேற்றி அனுப்பிய சந்தோஷத்தில் உற்சாகமாய் இருந்தாள்.

கீதுவின் வீட்டாரின் முன்னேற்பாடுபடி அங்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து தனது வழக்கப்படி பெண்ணை பார்த்தனர் இருவீட்டாருக்கும் பிடித்துப்போனது......தன் தோழிகளிடம் கேட்டு முடிவு சொல்கிறேன் என்றிருந்தவள் மாப்பிள்ளையையும் அவரது குடும்பத்தாரையும் பிடித்துப்போகவே உடனே சம்மதம் தெரிவித்து விட்டாள்...!

சரி இரண்டு வீட்டாருக்கும் பிடித்தாகிவிட்டது உடனே நிச்சயதார்த்தத்தையும் வைத்து விடுவோம் என்று ஒரு பெரிசு வாய் வைக்க.....கீது கண்களால் தன் தந்தையிடம் இப்பொழுது வேண்டாம் என்றாள்.தோழிகளுக்காகதான் என்று புரிந்து கொண்டவர் விஷயத்தை அவர்களிடம் சொல்ல சரி அடுத்த மாதம் ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க வச்சிக்கலாம் என்று சம்மதம் தெரிவித்தனர்........!

அனைத்தையும் பொறுமையாய் கவனித்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை "பொண்ணிடம் கொஞ்சம் தனியாகப்பேசணும்"என்று கேட்டார்.??


"தன்னை ஏமாற்றியவனை பழிவாங்கும் திட்டத்தில் நாம் சீக்கிரம் வெற்றியடைந்து விடுவோமா?என்ற யோசனையில் வந்தனா ஒரு பக்கம் தன்னந்தனியாய்..."..?
"தன்னுடைய கல்யாண ஏற்பாட்டில் தனது குடும்பத்தோடு கீது அடுத்து என்ன நடக்கும்?மாப்பிள்ளைஎன்ன சொல்லப்போகிறார் என்ற யோசனையில்..."..?
"தன் தோழிக்காக நாம் சரியாக எல்லாம் செய்ய வேண்டும் சொதப்பாமல்????என்ற எண்ணத்தில் வசந்துடன் ரியா"?
மூன்று புறமாய் இருந்து கொண்டு தோழிகளின் அல்லல்கள்........


தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (30-Jan-16, 10:17 am)
பார்வை : 366

மேலே