பேனாவின் தவம்
அன்பும் அழகும் அசத்தும் அறிவோடு
பண்பும் உடைய பனிமலரே-மின்னும்
இளையநிலா உன்னை எழுதவென் பேனா
தலைகீழாய் செய்யும் தவம் !
கடமை புரிவோரின் கைதூக்கிப் போற்ற
நடுவு நிலைமையை நாட்ட -கொடுமை
களையும் வழிகளைக் காணவென் பேனா
தலைகீழாய் செய்யும் தவம் !

