பூவே உந்தன் ஆசை விழி~சகா

(எழுத்து தள நண்பர்களுக்கு வணக்கம்...
காட்சிப் பிழைகள் தொடரில் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை...
நான் ஒரு சந்தத்திர்க்காய் எழுதிய கவிதை பதிவு செய்துள்ளேன்....தங்களின் மேலான கருத்திற்கு...)

உன்னை பார்த்த அந்த நொடி
உள்ளே வைத்தாய் காதல் வெடி
பூவே உந்தன் ஆசை விழி
கல்லை வெல்லும் காதல் உளி

கண்கள் ஏங்குதே மனமும் துடிக்குதே
பூவே உனைக்காண...!!!
உள்ளம் ஏங்குதே உதடு துடிக்குதே
நானும் உனைப்பாட…!!!

காற்றில் ஏறி தூரம் போவோம்
காதல் வானை கடந்து போவோம்…!!!
காதல் கொடியில் பூத்துக்கிடப்போம்
காற்று வானில் சிறகை விரிப்போம்…!!!

பூவே… உன் வாசமே
இதயம் பூக்கும் நேசமே… உன்
பார்வையில்… சூடமாய்
நானுந்தான்… கறைகிறேன்...!!!

நீயே...என் சுவாசமே
புதியதாய் வந்த நேசமே...என்
நினைவினில்...முழுதுமாய்
நானுந்தான்...நிறைக்கிறேன்…!!!

காலம் முழுதும் காத்துக் கிடப்பேன்
காற்று வானில் பூத்துக் கிடப்பேன்
காதல் கொடியின் சிறகை விரிப்பேன்...!!!

என்றும், காதல் உனைச்சேர...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (30-Jan-16, 4:24 pm)
பார்வை : 160

மேலே