ஆதிக்கம் செலுத்த இருக்கிறாள்

சொல்லவென்னா வார்த்தைகள்
உன் அழகை கண்டதும்
நிலவே உன்னை
கொஞ்ச நினைக்கும்

உன் கண்களை கண்டால்
கள்வனும் கவி பாடுவான்
இசையரியாதவனும்
இசைக்க ஆவல் கொள்வான்.

உன் கூந்தலது
அசைவதைக் கொண்டே
வீசுவது தென்றலென
அறிந்து கொள்ளலாம்.

உன் கருங்கூந்தலைக்
கண்டதும், மயிலோ மழை
வரக்கூடுமோ என
தோகைதனை விரித்து
நடனமிடக்கூடும்.

பாவையே உன் பார்வையைக் கண்டால்
காளைகள் காதல் கொள்ளாமல்
இருக்க இயலாது ஆதலால்
பாதையை பார்த்து
நடையை மேற்க்கொள்.

உடையோ உன் இடையின்
அழகை வசீகரிக்க
வைக்கிறது என்னாசை
இடையழகி.

அடடா
இவள் என்ன
இந்திரா சபையின்
ரம்பையை
வம்பிழுப்பவள்
போல் உள்ளால்
தன் அழகின் ஆதிக்கத்தில்.

எங்கும் இவள் நடக்க
பூக்களால் அமைந்த பாதைதனை இனி
அமைத்திட வேண்டும் என்று
சட்டசபையில் சட்டமியற்ற
அனைவரும் போராடப்போகிறார்கள்.

பட்டி தொட்டியெல்லாம்
ஆதிக்கம் செலுத்த இருக்கிறாள்
எதற்கும் அசராத ஆண்களே
அசைந்து கொடுக்க தயாராகுங்கள்
அழகுப்புயல் உங்களை
தாக்கக்கூடும்.

எழுதியவர் : பரிதி காமராஜ் (30-Jan-16, 4:55 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 140

மேலே