கருவிழி பெண்
கருவிழி பெண்ணே!
உன்
கதிர்வீச்சில்
ஒரு வழி இன்றி
தெருவழி திரிந்தவன்!
தினமும் உன்
நினைவோடு
திண்ணையில் உறங்கியபோது
தீண்டாமல் சென்ற
தென்றலிடம் கேட்டேன்
என்ன கோபமென்று..
உடைகளை சுமந்த மடையனே!-என்
காதல்
விடைகளை எப்பொழுது சொல்வாய் என்று?