ஹார்மோன் தியரி
ஹார்மோன் தியரி
=================
என் செவிகள்
ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகளால்
நிரப்பப்பட்டிருக்கலாம்
உன் கூரிய மௌனத்தை
உட்கொள்ளுமுன்னே
அவை தின்று செறித்துவிடுகின்றன
என் பிரிய தண்டனைகளிலிருந்து
தப்பி ஓடுகிற
ரோசலின்ட் கதாபாத்திரமாகிறதுபோல்
உன் அலைப்பேசியின் குறுஞ் செயதி
இதோ மின்கல வீரியத்தை
அழித்துக் கொண்டிருக்கிறது
நல்ல மேயப்பர்களோ ஆர்டன் வனமோ
இங்கு எங்கும் தேவதை சிரிப்பின்
நடமாட்டம் இருப்பதாக சொல்லவில்லையே
என் இதயத்தில் முளைவிட்ட
காதல் தாவரத்தின்
கடைநிலை ப்ரோட்டான்களுக்கு
இனியும் அவதாரம் தரிக்கும்
சக்தியில்லை என்பதை
காதல் தவிர்த்து பச்சைவாசம் கண்டப்புழு
அரித்து சொல்லிக் கொண்டிருக்கிறது
ஆதவன் உன்னிடம்
வானின் நீல சுவடுகளை
மேகம் புணர்வதாக சொன்னக்கதையில்
சிறு மாற்றம் கொணர்த்தினேன்
தலை சாய்ந்த தாமரை
தண்டுமுறிந்து
தற்கொலை செய்துக்கொள்வாள்
வேண்டாம் விடு என்றாய்
மாசின்ராமின் கனத்த மழைவாசத்தின்
கிளர்ச்சிகளைக் கொடுத்துவிட்டு
என்னை மேடை ஏறாத
நளிஞன் செய்வதில்
உனக்கு இலாபமிருக்கலாம்
உள்ளங்கைகளைக் கூப்பிக் கொண்டு
அதன்அடர் இருட்டிற்குள்
பித்தோவன் சிம்பொனியின்
கின்னாரப் பெட்டி வாசிப்புகளுக்கு
நடனமாடிக் கொண்டிருக்கும் சிண்ட்ரெல்லாவே
உன் பசுமை பிரபஞ்சத்தின்
பயோஸ்கோப் காண்கிறேன்
உனக்கான விடுதலை,
இன்றல்ல நாளை என்று சொல்லிச் சொல்லியே
பின்னிரவின், நரவாசத்திற்கு அப்பால்,
என்மேல் இழையோடிய
உன் உவர்நீரின்,
ஈரம் உறிஞ்சும் ஜன்னலோர வெய்யில்,
இதமாகத்தான் இருந்தது,
சொற்றவறின் (சொல்+தவறு)பாடின்மையால்
என்னோடு பேசும்
யாருடைய வார்த்தைகளிலிருந்தும்
உன்னுடைய முனங்கல்களை
என் ஹார்மோன்கள்
நினைவுப் படுத்துவதாக இல்லை விடு ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"