புரட்சிக் கொடி செ ம்பா

பூமியில் சேகுவாரா செய்தான் உரிமைப் புரட்சியை
பூவிதழில் அன்பே புரிவதோ புன்னகை யின்புரட்சி
பூமிசிவக் கும்குருதி சேயின் உரிமைப் புரட்சியில்
பூவிதழ் கள்சிவக்கும் உன்புரட்சிப் புன்னகையில்
எப்புரட்சிக் குக்கொடி நான்பிடித்துச் செல்வேன்
புரட்சிக் கொடிநீயே சொல்
---தொடரும்
----கவின் சாரலன்
யாப்பு வழியில் புரட்சிக் கொடி
பா அடையாளம் தெரிந்தவர்கள் சுட்டலாம்

சே குவாரா --எங்கெல்லாம் புரட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறதோ அங்கெல்லாம்
நான் கொடி பிடித்து வருவேன் என்றுரைத்த உத்தமப் புரட்சியாளன் சே
சே நேதாஜி போன்ற உன்னதப் புரட்சியாளர்களின் வீர வரலாறுகளைப்
படியுங்கள். நீங்கள் எத்துறையில் இருந்தாலும் ஆற்றலும் உத்வேகமும்
பெருகி வரும் .

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-16, 10:32 am)
பார்வை : 110

மேலே