மாற்றமே நீயாய்

உனது உயர்வுச் சிதைக்கும் உறவினை மாற்று!
உன்னைச் சோதிக்கும் சூழலை மாற்று!
உனது உடல் குறித்த எண்ணம் மாற்று!
உள்ளத்தை உருக்கும் தாழ்வினை மாற்று!
உணர்வில் கரைந்த ஏக்கம் மாற்று!
உனது உழைப்பை பழிக்கும் உலகைமாற்று!
உனது துயர வாழ்வின் பதிவுகள் மாற்று!
உனது தூக்கம் கலைக்கும்வழிகள் மாற்று!
புதியப் படைபாய் உன்னையே மாற்று!
ஒளியின் உருவாய் உனது திறன்கள் மாற்று!
வழியை வளமாய் உனது வாழ்வைமாற்று!
மனதில் துணிவை உளியாய் மாற்று!
அகத்தின் அழகை நகைப்பாய் மாற்று!
உனது உதவி நோக்கியே உறைவிடம் மாற்று!
உலகை மாற்றும் திறன்கள் உன்னிலிருக்க
நீ மாற்றுத் திறன் உடையோன் என்பதை மாற்று!
நான் மாற்றும்திறன் உடையோன் என்பதாய்
மாற்று!



































நியூ































































































Unarvil

எழுதியவர் : hepzi panimayam (31-Jan-16, 8:41 pm)
சேர்த்தது : hepzi panimayam
பார்வை : 104

மேலே