குடி உயர கோன் உயரும்
குடிகள் உயர்ந்தால் குடியாட்சித் தங்கிப்
படிகள் எழும்பிட பல்லுயிர் ஓம்பிச்
செடிகள் முழுதும் செழிப்பெனப் பூத்து
மிடிகள் களையும் மிளிர்ந்து .
மிளிர்ந்த அரசவை மிக்கு நிறைந்தும்
தளர்வை யறியாத் தகைமைச் சபையில்
வளர்ந்த பெரியோர் வளர்ச்சியில் நின்று
களிப்பைத் தருவாராம் காண்.
காண்கின்ற வெற்றிகளும் கண்ணெதிரே சொல்லிடுமாம்
ஆண்டவனின் ஆட்சி அழிவில்லாக் கோனாட்சி
வேண்டுகின்ற நன்னெறிகள் வேகமுற பற்றிடுமாம் .
மாண்புடைய மக்களாட்சி மண் .
மண்னுலகைக் காத்திடவும் மாண்புடைய கோனாட்சி
கண்களுக்குத் தோற்றாகக் காண்பவர்க்குத் தோன்றிடும்
விண்ணகமும் விந்தையென வீட்டினர்க்கு நாளும்நாம்
பண்களிலும் பாடிடுவோம் பா .
பாடல்கள் பண்ணிசையில் பல்லோரும் கேட்டிடவும்
ஊடல்கள் இல்லா உலகினை ஆண்டிட
மாடங்கள் நல்லதாக மண்ணுலகில் கட்டிவைக்க
கூடங்கள் மாறும் குடி .