நான் கடவுள்

நான் கடவுள்

ஒரு கட்டத்தில்
அவள் தன்னை
பைத்தியம் என்றே
நம்பத் தொடங்கினாள்....
எங்கிருந்தோ
வந்த ஒருவன்
அவளுடன் சேர்ந்து
"உனது பைத்தியமே
எனது தேடல்...
ஆதலால்
இன்று முதல்
நீ ஏவாளாய் போ"
என்று வரம் தந்து
புன்னகைத்தான்....

அவன் வேறு
யாரும் இல்லை....
ஏவாள் மீது
கொண்ட காதலால்
ஆதாமைக் கொன்ற
கடவுள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (1-Feb-16, 12:38 pm)
Tanglish : naan kadavul
பார்வை : 808

சிறந்த கவிதைகள்

மேலே