பெண்சிலை
எத்தனை கோடிகள்
போனாலும் ஏலத்தில் எடுப்பேன்
அவளை வரைந்த பென்சிலை
அவள் சிப்பிக்குப் பிறக்காது
சிற்பிக்குப் பிறந்த பெண் சிலை
அவள் கிளியோபாட்ரா
வீட்டில் வளர்த்தெடுத்த கிளி
கிளிண்டன் வீட்டில்
வார்த்தெடுத்த களி
அவள் கையில் இட்டிருந்தால்
மருதாணி
அதை என் கன்னத்தில்
இடப்பார்க்கின்றாள் அந்த மகராணி