கண்கள் கலங்கியது
என்ன செய்வது என
புரியாமல்
கண்கள் கலங்கி
நிற்கிறேன்.
இதயம் கனமாகியது
உதயம் இல்லா வாழ்வாகியது
மதியது இல்லை இனி
விதி வழி தானோ.
காதல் என்பது காவியம்தான்
காதலியே நீயும் ஓவியம்தான்
மனதில் ஆசைகள் ஆயுரம்தான் அதை
காகிதத்தில் வரைந்தேன் நானும்தான்
தவிப்பது நெஞ்சம்
என்னில் அடைந்துவடு தஞ்சம்
என் மேல் உனக்கேன்
இந்த வஞ்சம்
மனதிலோ படபடப்பு உன்
பார்வையிலோ கடுகடுப்பு
பதிலுககாக என்னில்
சிறிய தவிப்பு.
பதிலதை உரைத்தாய் என்
வாழ்வின் ஒளியதை மறைத்தாய்.
என்ன செய்வதென
அறியாமல்
கண்கள் கலங்கி
நிற்கின்றேன்.