இளந்தமிழா விழித்தெழு

நித்திரையில் நித்தமும்
கிடந்தது போதும்
முகநூலில் முடங்கி
கிடந்ததும் போதும்
இளந்தமிழா... விழித்தெழு!!
ஆதிக்கத்தின்
அடக்குமுறைகளை
அடக்கிடுவோம்!
சோம்பலை விடுத்து
சாதனைகள் பல
செய்திடுவோம்!!
நம்மில் உயர்வு
தாழ்வில்லை என்றிடுவோம்!
மனிதம் வளர
அன்பே கடவுளென போற்றிடுவோம்!!
கல்வியோடு
நல் கனிவும் கற்றிடுவோம்!
பண்போடு
நல் பகுத்தறிவும் பெற்றிடுவோம்!!
கண்ணின் மணிகளாய்
விவசாயம் காத்திடுவோம்!
காணும் இடமெல்லாம்
பசுமை புரட்சி செய்திடுவோம்!!
நெகிழி குப்பைகளை
நிறைவாய் ஒழித்திடுவோம்!
சுற்றுச்சூழலின் தூய்மையை
கனிவாய் காத்திடுவோம்!!
யாரோனும் இடர்படும்
துயர் கேட்டால்
தயங்காது உதவிடுவோம்!
விசையெழுப்பி எழுந்திடுவோம்!
எதிரிகள் வீழும்
திசை நோக்கி எழுந்திடுவோம்!!
இடிமுழக்கமாய்
கிளர்ந்தெழுவோம்!
கல(ழ)க அரசியலை
அடியோடு அழித்திடுவோம்!!
சீறும் புலிகளாய்
சினந்தெழுவோம்!
ஊழல் தலைவர்களின்
தலை அறுத்திடுவோம்!!
காற்றினை போல்
அடங்காமல் திரிந்திடுவோம்!
தொலைந்து போன
சனநாயகத்தை தேடிடுவோம்!!
சாதி கூந்தலுக்காய்
கொலை செய்பவன்
குரல்வளை நொறுக்கிடுவோம்!
காம இச்சைக்காய்
வன்புணர்வு செய்பவன்
குறி அறுத்தெறிவோம்!!
இளந்தமிழா... விழித்தெழு!!
இனி ஒரு விதி செய்திடுவோம்!
அதை எந்நாளும் காத்திடுவோம்!!