உப்புகற்கள் பழமொழிகள் கவிதைகள் 6

கோள் சொல்லி
கும்பிட்டு வாழ்பவர்கள் பேச்சுக்கு
எட்டிக்காயை இனிக்கும் என்பர்
கரும்பை கசக்கிறது என்பர்
இவர்கள் பேச்சில்
இம்மி அளவு கூட மெய்கள்
மேலொங்கி நிற்காது
கரும்பை கசக்கிறது என்பவன்
தன்னிடம் குற்றமில்லை என்று கூற
கரும்பை கசப்பாக மாற்றவும் தயங்கமாட்டான்
தான் பிடித்த
முயலுக்கு மூன்று கால் என்று
தானே நம்பும் தட்டுகெட்டவர்கள்
கரைந்து போகும் உப்புகற்கள்
காணாமற் போயிடும் இவர்கள் பேச்சுகள்