மரம்

பசுமையாய் நானிருந்தேன்
எனை நிழலுக்காக பயன்படுத்தினாய்
நீரன்றி பட்ட மரமாய் நானிருந்தேன்
எனை விறகுக்காக வெட்ட வந்தாய்

சாலைகளில் ஓரமாய் நானிருந்தேன்
தூரமாய் சாலையமைக்க இரக்கமின்றி
எனைக் கொன்றாய்
மழையோ பொழியவில்லையென
இயற்கையையும் நொந்தாய் நீ
மழைக்கு ஆதி நான் தான் என
ஞாபகம் வரும் முன்பே
என் குலத்தினையே அழிக்க வந்தாய்
எஞ்சியுள்ள என் குலத்தால் வாழ்ந்து வரும்
ஆறறிவு மிருகமே
உன்னறிவைக் கேள்
அது சொல்லும் நான் யாரென்று
இனிமேலும் பத்திரமாய் எனைக் காக்க
மறந்தால் நீ உனைப் படைத்த
கடவுள் வந்தாலும் உனைக்
காக்க முடியாது என் பசுமை இல்லாமல்

எழுதியவர் : எழில் குமரன் (2-Feb-16, 11:59 pm)
Tanglish : maram
பார்வை : 263

மேலே