சகோதரத்துவம்

சகோதரத்துவம்

வார்த்தைகளால் விளக்கிவிட முடியாதது
அண்ணன் தம்பி உறவு.
வாய்பிளக்க வைத்துவிடும்
பாசத்தின் அளவு.
ஒவ்வொரு அண்ணனுக்கும் இரண்டு முகங்கள்
துறைமுகமாய் அதட்டலை
அடுக்கி வைத்திருக்கும் ஒரு முகம்
மறைமுகமாய் அன்பை
பதுக்கி வைத்திருக்கும் ஒரு முகம்
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
இது பழமொழி
அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி
இதை நீ வழிமொழி.
தோழனாய் போட்டியாளனாய் இருக்கும்
சிறந்த ஆல்ரவுன்டர் அண்ணன்.
முன்னுக்கு பின்னாய் முரண்பட்டாலும்
ஒன்னுக்குள் ஒன்னாய் கலந்திருப்பார்கள்.
அழுதே அண்ணனின் பிஸ்கட்டிலும்
பாதியை வாங்கிவிடும்
தந்திரக்காரன் தம்பி.
பருவமாற்றம் உருவத்தைமட்டுமல்ல
கர்வத்தையும் மாற்றி
பாசத்தை புகட்டச் செய்யும்
அண்ணனின் அன்னூன்யம்
தம்பியை ஸ்தம்பிக்கச் செய்யும்.
மொத்தத்தில் தம்பி அண்ணனின் செல்லம்
அண்ணன் தம்பியின் அண்டம்.

-சுஜீத்

எழுதியவர் : சுஜீத் (3-Feb-16, 6:02 pm)
சேர்த்தது : சுஜித்
பார்வை : 909

மேலே