என்னருகில் நீ இருந்தால்

தேய்நிலா நொடி பொழுதில் முழுநிலவாய் மாறியிருந்திருக்கும்
சுடும் சூரியன்கூட மேலும் கொதித்துப் போயிருப்பான்
கடல் அலைகளுக்கிடையில் அமைதி நிலவியிருக்கும்
மனிதர்களின் சுவாச காற்றுக்கூட புயலாய்மாறி வேகம்பிடித்திருக்கும்
மொட்டுகள் மலர மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கும்
பெரிய மலைகள் எல்லாம் குழந்தைகள் விளையாட மடுவாய் மாறியிருக்கும்
உணவளிக்கும் பயிர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்திருக்கும்
பூமிகூட சுழல்வதை நிறுத்தி போராட்டம் நடத்திருக்கும்
என்னவனே,
நீ என்னருகில் இருந்தால் மட்டும் !!!