அறை

ம்ம்..ம்ம்..... வேண்டாம்
என்னுடைய அந்த அறையை திறக்காதீர்கள்

அதில் இருப்பவை.....

புறக்கணிக்கப்பட்ட கண்ணீர்
அங்கீகரிக்கப்படாத பலவீனங்கள்
வெளியேற்றப்பட்டதாய்
நான் நம்பியிருக்கும் சில முகங்கள்

மறக்கவே முடியாத சில சொப்பணங்கள்
மறைத்து வைக்கப்பட்ட பல கனவுகள்
எனக்கே பிடிக்காமல் நான் அணிந்துகொள்ளும்
இரண்டு மூன்று முகமூடிகள்

கேட்கப்படாத, கொடுக்கப்படாத மன்னிப்புகள்
நிதர்சனத்துக்கு சரிபட்டு வராத
கொள்கைகள், படிப்பினைகள்
சில பல சுய பச்சாதாபங்கள்

ஆதலால் ....வேண்டாம்
என்னுடைய அந்த அறையை திறக்காதீர்கள்

அதில் இருப்பவை.....

பயங்கரமாய் உரக்க ஊளையிடும்
சகிக்க முடியாத துர்வாடை வீசும்
பெரும்குரலெடுத்து சிரிக்கும்
நீண்ட மௌனத்தால் கூச்சலிடும்

எனவே ...வேண்டாம்
என்னுடைய அந்த அறையை திறக்காதீர்கள்

-டயானா

எழுதியவர் : மேரி டயானா (5-Feb-16, 1:47 pm)
பார்வை : 66

மேலே