நீயும்
நீ..... யும். ம் ம் ம்.......
உன் பார்வைக்காக
கடைசி நொடி வரை
காத்திருந்த நான்-நீ
பார்த்ததும், பார்க்காததாய்
பார்வையை மாற்றுகிறேன்.
உன்னை பார்ப்பதற்காகவே
வருபவன் நான்-ஏனோ
உன்னிடமே வந்து
யாரை பற்றியோ கேட்கிறேன்.
கைபேசியில் உனக்கு தான்
அழைப்பு கொடுத்தேன்.
பழியை என் அண்ணன் மகன்
மீது சுலபமாய் சுமத்துகிறேன்.
வருடத்திற்கு மூன்று முறை
பிறந்த நாள் கொண்டாடுவது,
உனக்கு பூக்கள் கொடுக்க தான்.
உன்னை தான் பின் தொடர்கிறேன்.
நீ கண்டு விட்டால்
சிரமப்பட்டு சமாளித்து
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்.
உன் விழிகளை பார்த்தே
ஊமையாகும் என்னை,
இதுவரை ,
எத்தனை முறை -இடைமறித்து
என்ன? என்றிருப்பாய் ....
இவையெல்லாம் காதல்
என்றால்,
சத்தியமாய் நான் , உன்னை காதலிக்கிறேன்.
நீ.....?