கண் விபத்து

இன்று மதியம்
ஒன்றேகால் மணி..
நம் கண்களுக்குள்
விபத்து நிகழ்ந்த நேரம் ..!
உன்
பார்வை எனும் அம்பு
என்னைத் துளைத்ததும்
என் உயிர்
என்னை விட்டுப் பிரிந்தது..
உயிரற்ற ஜடம் போல்
உனைப் பார்த்துக் கொண்டே நின்றேன்
மெல்லிய காற்றுப் பட்டதால்
என் உடை அசைந்தது ...!
கூரிய உன் பார்வை பட்டதும்
என் இமை கூட அசையவில்லை ...!!
இத்தகைய
வினோத விபத்தை -நான்
கண்டதுமில்லை கீட்டதுமில்லை
உன் பார்வை
ஏற்படுத்திய காயத்தினால்
துடித்துக் கொண்டிருக்கிறேன்..!
என்னவனே ...!
என் காயத்திற்கு வேண்டிய மருந்தைக் கொடுத்துவிடு...!!!!

எழுதியவர் : பூங்குழலி (5-Feb-16, 4:40 pm)
Tanglish : kan vibathu
பார்வை : 108

மேலே