ஒரு சான் வயிற்றுக்காக
..."" ஒரு சான் வயிற்றுக்காக ""...
ஓட்டமும் நடையுமாய் ஓயா
கடல் அலைகளைப்போல்
எல்லோரின் வாழ்க்கையும்
எட்டுத்திக்கிலும் பறக்கிறது
ஒரு சான் வயிற்றுக்காக !!!
பகட்டுகார பண்ணையாரே
புடைக்கவே தின்று சிரிப்பவரே
புண்ணாகி ஒருவன் துடிக்கிறான்
உன் புறங்கையை நீ உதறிவிடு
அவனும் பிழைத்துக்கொள்வான் !!!
சான் வயிறே உலகின் சாரதி
இதை சொல்லியே முண்டாசு
மீசை பாரதியும் சொன்னான்
தனி மனிதனுக்கில்லையேல்
உலகை அழித்திடுவோமென !!!
போதுமென்று ஒருபொழுதும்
வேண்டுமென மறுபொழுதும்
சிறிதும் அயரா உழைத்திடும்
நிறைக்க நிறைக்க கரைத்து
வெளியாக்கும் எந்திரமாம் !!!
ஏமாற்றியே எடுத்துச்செல்ல
பொய் புரட்டை திருகிவிட்டு
நித்தமும் பல சண்டையிட்டு
நிம்மதியிழந்தே வாழ்கிறோம்
இந்த ஒரு சான் வயிற்றுக்காக !!!
நாடுவிட்டு நாடுவந்து பலர்
கழுதைபோல் பொதி சுமந்து
கண்ணீரை ஊற்றி கழுவிடும்
சிந்தும் செந்நீர் குருதிகளும்
இந்த ஒரு சான் வயிற்றுக்காக !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...