காதலி தேவை

காதலி தேவை !
இவள் எவளோ-எந்த அறிவிப்பும் இன்றி
என்னுள் மின்னலை பாய்ச்ச வேண்டும்...
முதல் விழி சந்திப்புகளில் -என்னை திணற
வைத்து, கவிமழை பொழிந்திடவேண்டும்...
முதல் பார்வை, விழிக்கண்டதும்
இமைகளை மறந்து நான் சிலையாக,
அவள் எதிர் நின்றும் ஊமையாக,
இவள் என்னவலென்று, என் உள்ளம் உரைத்திட..,
அவள் பின் நடை பயின்று,அவளை துரத்தி ,
அவள் நிழலை பிடித்து, அதனிடம் விசாரித்து,
அவளை நெருங்கி என் காதல் விழைய....,
மழைத்துளி ஊடுருவும் கதிரோளியாய்.,
என் மனம் எங்கும் வானவில் பூத்துக்குலுங்க....
என்னுயிர் பூரிப்புகளின் மணங்களை
அவள் நாசி உணர்ந்திட , என் காதல் உச்சரித்து
இணைந்திட வேண்டும் நாங்கள்...!
அவள் அழகியென்று என் பார்வைக்கு
எப்போதும் தெரிந்தால் போதும்...
மனம் ஒப்புக்கொண்ட பின் -இவள்முன்
நிலவும் தோற்றுத்தான் போகும்...
அவள் மயிரிழைக்குள் வாசம் செய்திட,
அவள் இமைகளை வாடகைக்கு வாங்கிட,
அவள் மௌனங்களை ரசித்திட,
அவள் மொழியினை அனுபவித்திட,
அவள் மூக்கில் மூக்குத்தியாய் மாறிட,
அவள் நாணத்தில் கரைந்திட,
அவளை என்னுள் முழுவதுமாய்
எண்ணி, என் ரகசியங்களை பகிர்ந்திட...
என் எண்ணம் அவள் அறிய,
அவள் தும்மலின் அர்த்தம் புரிந்திட,
இந்த முனகல் எதற்கு என்பது வரை
புரிந்து கொண்டு காதல் பழகிட,
அவள் ஒருத்தி மட்டும் போதும் எனக்கு...
அவளுக்கு பிடித்தது போல் மாறவும்,
அவளுக்காக எதையும் மாற்றவும்,
அவள் என்னவள் என்றுரைக்கவும்,
வேண்டும் ஒருத்தி, என் காதலியாக......
என் சட்டையைப் பிடித்து
உலுக்கிச் சண்டையிடுவதற்காகவும்,
என் விரல்களை இறுக பிடித்து
சாலையை கடந்து போவதற்காகவும்,
நன் கடந்து செல்லும் பூக்கடையில்
எல்லாம், பூ பறிப்பதற்காகவும்,
என் விடியலில் தேனீருடன்
நான் அவளை எழுப்புவதற்காகவும்,
நேரம் மறந்து அவள் விழிக்
கண்டே என்னை மறப்பதற்காகவும்,
என்னுலகில் சிலருடன் அவளையும் ,
அவளுலகில் சிலருடன் என்னையும்,
ஒரே வாழ்கையில் இணைத்திடவும்,
இரு பாதைகள் இல்லாது
ஒரே பாதையில் இரு பாதங்கள் என
எங்கள் பாததடங்களின்
இறந்தகால நினைவுகளையெல்லாம்
எங்கள் பிள்ளைகளின் உறக்கத்திற்கு
கதைகளாய் கதைத்து மகிழ்திட,
என எத்தனையோ , அத்தனை
ஆசைகளையும் நிறை வேற்றிட
அவள் வேண்டும் காதலியாக...
அதிகம் ஆசையில்லை , எண்பது
போதும் எங்களுக்கு ..,
கடைசி நொடி –அவள்முகம்
கண்டு என்னுயிர் பிரிந்தால்
அவள் கண்ணீர் என்முகம்
நோக்கி உதிர்ந்து விழுந்தால்
வேறென்ன வேண்டும் எனக்கு.
மனித வாழ்கையின் அர்த்தம்
அதை முழுதாய் ஆண்டு
அனுபவித்து வாழ்ந்த நிம்மதியில்
இறந்து போகவும் வேண்டும்...
அந்த ஒற்றை நிமிடம் மட்டும்
அவள் கண்ணீர் சிந்த ஆசைப்படுகிறேன்....
அடுத்த வினாடியே அவளையும்
இலவச விசாவில் அழைத்துதான் போவேன்...
பின்,எனக்கு அப்புறம் யார் அவளை
என்னைப் போல் பார்த்துக் கொள்வார்கள்....
எனக்கானவள் , யாரடி நீ?
உன்னைப் பார்க்கும் முன்பே
உன்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன்...
_அபிசாதன்

எழுதியவர் : அபிசாதன் (5-Feb-16, 5:56 pm)
சேர்த்தது : அபிசாதன்
Tanglish : kathali thevai
பார்வை : 169

மேலே