எட்டேகால் லட்சணம்
ஒரு நாள் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது புலவர் ஒருவர் அவ்வையாரை நோக்கி ஆரைக் கீரைக்கும் அவ்வைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள்படும் படியாக ஒப்பிட்டு,
‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ‘
என்று கூறினார்.
இதற்கு அவ்வையார்,
‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் துõதுவனே
ஆரையடா சொன்னாயது.’ என்று பதில் பாட்டு கொடுத்தார்.
தமிழில் ‘அ‘ அன்பது எண் 8 ஐக் குறிக்கும் ‘வ‘ 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் ‘அவ‘ என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் ‘அவ லட்சணமே‘ எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் ‘எருமையே‘ எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் ‘மூதேவியின் வாகனமே‘ என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் ‘குட்டிச் சுவரே‘ என்று பொருள்.
‘குலராமன் துõதுவனே‘ என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் துõது சென்ற அனுமானான ‘குரங்கே‘ என்றும் பொருள் படும். ‘ஆரையடா சொன்னாயது‘ என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் ‘அடா‘ என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை ‘அடி‘ என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
*எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, ‘என்ன?‘ என்று கேட்க, ‘நெய்ங்க...‘ உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது‘ என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, ‘விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!‘ என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
**********************************************