கழுதை என்றால் அழகிய பெண்
செல்லமாகவோ கோபமாகவோ ஒருவரைத் திட்டும்போது ‘சீ, கழுதை’ என்கிறோம். முட்டாள்தனத்தின் அடையாளமாகவும் கழுதை சொல்லப்படுகிறது.
தவறு செய்கிறவர்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேலே உட்கார வைப்பது ஒரு இழிவான தண்டனையாக இருந்திருக்கிறது.
கழுதை மூதேவியின் வாகனம். கழுதை கத்தினால் நல்ல சகுனம்.
இப்படி கழுதையை வைத்து நம் அன்றாட வாழ்க்கையில் சொல்லப்படும் பழமொழிகளை
த்தெரிஞ்சுகுங்க.
‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’
‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’
‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’
‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”
‘கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா’
‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’
‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’
‘கழுதை வயசாச்சு!’
‘அவுத்து விட்ட கழுதை போல‘
‘கழுதை பொறுமையப்பா உனக்கு’
‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’
‘நீ என்ன கழுதைப்பாலைக்குடுத்து வளர்ந்தாயா?’
‘வரவர மாமியா கழுத போல ஆனாளாம்!’
‘காய்ச்சுறவ காய்ச்சுனா கழுத மூத்திரம் கூட ரசம் தான்‘
‘கழுத தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போச்சு’
‘கழுதைக்கு மட்டும் தான் தெரியும் அழுக்கு காகிதத்தின் ருசி‘.
‘கழுதை போல பொண்டாட்டி’
‘கழுதைக் காது’
அட, இதெல்லாம் இருக்கட்டும்! இது மெயின் பாயின்ட்.
தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:
கழு - அழகிய
தை - பெண்
கழுதை என்றால், அழகிய பெண் என்று பொருளாம்!
இனிமே கழுதைன்னு யாராவது திட்டினா நீங்க வெடகப்படணும்!
***************