நாவலரின் நகைச்சுவை
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. ஒருமுறை அவருடைய சேவையைப்ப் பாராட்டி ஒரு பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் ஏற்புரையில் பேசும் போது, ”ஆண்களுக்கு சமமாக பெண்களை முன்னேற்ற செய்ய வேண்டும் என்று பாடுபட்டு வந்தோம்.ஆனால் இப்போது பெண்களுக்கு சமமாக ஆண்களை முன்னேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது,”என்று கூறி பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.
எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்க அவர் தொடர்ந்தார்,”உதாரணத்துக்கு என் மனைவியை சொல்லலாம்.அவர் 25 ஆண்டுகளுக்கும் முன்னரே டாக்டராகி விட்டார்.நான் இப்போதுதான் டாக்டராகியுள்ளேன்.”(அவரது மனைவியின் பெயர் டாக்டர் விசாலாக்ஷி நெடுஞ்செழியன்.)