நினைவு
பெருக்கி துடைத்து
விளக்கை அணைத்து
எண்ணம் தூங்குவதற்கு போயாயிற்று
இருட்டில் உருட்டும் பூனையாய்
இந்த திருட்டு மூளை
எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறது
சத்தம் கேட்டு எழுந்து விளக்கை போட்ட
எண்ணத்தின் பார்வைக்கு முன்னே
தட்டிவிடப்பட்டு உருண்டு கொண்டிருந்தது
ஒரு நினைவு .......
-டயானா