நட்பின் வலி
கருவறையில் கிடைத்த உறவல்ல இது....
மனவறையில் பதிந்த உறவு....
உயிரலையில் உதித்த உறவல்ல இது...
உணர்வலையில் பூத்த உறவு...
இப்பூவுலகில் நான் பாவையாய் பிறந்ததாலோ..
மூன்றெழுத்திற்கு என்ன சக்தி...
அன்னை என்ற மூன்றெழுத்தில் ஆரம்பித்து..
தந்தை என்ற மூன்றெழுத்தையும் தாண்டி...
நட்பு என்ற மூன்றெழுத்தில் நான் நுழைந்தேன்..
என் கவலையை மறந்து...
தோள் சாய்த்திட தோழியாய் வந்தாய்...
இன்பத்தை இரட்டிப்பாக்கி...
துன்பத்தை தனதாக்கி...
நாமிருந்த நிமிடமெல்லாம்...
நினைவுகளாய் மனதிற்குள்..
என் கவலையெல்லாம்...
கன நொடியில் உன்னிடம் பகிர்ந்துவிட...
என்னை பற்றி என்னை விட...
உனக்கே தெரியும்...
என் நம்பிக்கையில் நீ நட்பே...
இன்று என்னால் நம்பமுடியவில்லை உன்னை..
என் தோழியாய் இப்படி...
என்னில் நடந்த நிகழ்வெல்லாம்...
மறைத்திடாமல் உன் மனதில் பதிவிட்டேன்...
நீயோ...
என்னிடம் மறைத்திட நினைத்ததை என்ன சொல்ல...
உண்மை தெரிந்தும்...
உன்னிடம் நான் கேட்கவில்லை..
உன்னை நான் நம்பியதால்..
வேதனைகள் பகிர்ந்தேன் உன்னிடம்...
உன்னால்...
சோதனைகளாய் திருப்பி தந்தாய்...
வலிகளை என்னிடம்...
நீயாய் தந்திடவில்லை...
மற்றொரு ஆணோடு சேர்ந்து...
எனக்கு வேதனையை பரிசளித்துவிட்டாய்...
இந்த நொடி துடிக்கிறேன்...
தோழியாய் தோள் சாய்த்த உன்னையும்...
நம்பிக்கையாய் இருந்த நட்பின் சுவாசத்தையும்...
தவறாய் தேர்ந்தெடுத்து விட்டேனா உன்னை..
இல்லை..
என் மேல் தவறா...
என்று...
நம்பிக்கையிழந்த நட்பில்...
வேதனையில் நான்...
பகிர்ந்து கொள்ள எவருமில்லை...
பரிதவிப்பில் என் மனம்.