நமது கல்வி
கல்வித்துறையின் இன்றைய
நிலை
ஒவ்வொரு பிரிவிக்கும் ஒவ்வொரு
விலை
அவ்விலையைக்கொடுக்க பெற்றோர்
தம் தலையை அடகு வைக்கும்
நிலை!
புலிகளாய் பிற துறைகளில்
வலம் வரவேண்டிய பலரின்
நிலையோ
இன்று
பொறியியல் கல்வி எனும்
பொறியில் சிக்கிய எலிகளாய்
மீள முடியா அவல
நிலை!
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பொம்மைகளின்
ஆலைகளோ?
இன்றைய கல்விச்சாலைகள்.
சிந்தனையைத்தூண்டி
மாணவர் தம்
எண்ணங்களின் வண்ணங்களைக்
வெளிக்கொணரும்
மலர்ச்சோலைகளாகட்டும் நம்
கல்விச்சாலைகள்.
கல்வித்திட்டம் இனி
திணிப்பதாய் இல்லாமல்
இனிப்பதாய் இருக்கட்டும்
வெறுப்பதாய் இல்லாமல்
ரசிப்பதாய் இருக்கட்டும்.