மக்கள் முதல்வர் ரங்கசாமி

நீ இந்திராகாந்தி மருத்துவமனை
கட்டிக்கொடுத்த
இந்திரா நகர் கண்டெடுத்த காந்தி
பிரம்மன் படைத்தது
மகனாக மருத்துவனை
இந்தப் பிரம்மச்சாரி
படைததல்லவா
மகப்பேறு மருத்துவமனை
உன்னால் ஏர் பிடித்த
கைகள்கூட இன்று
ஸ்டெதெஸ்கோப் பிடித்துக்கொண்டிருக்கின்றது
மண்ணெண்ணெய் விளக்கில்
படித்த மாணவன்கூட
மருத்துவ விளக்கம் படிதுக்கொண்டிருக்கின்றான்
நீ ஈகைகளை
உன் இரு கைகளாய்க் கொண்டவன்
அதனால் சட்டமன்றத்தில்
முதல்வரெனும் இருக்கையினை
உனக்களித்தான் ஆண்டவன்
விண்ணிலிருந்து
காமராசர் கைநழுவிய
எழுதுகோல் நீ
மண்ணிலிருந்து மக்களுக்குப்
பணிசெய்ய எழுந்த கோள் நீ
நீ வெள்ளை ஆடை
அணிந்த பிள்ளை
பாரியின் தேரை
அணைத்த முல்லை
மக்கள் உன்மீது கொண்ட
அன்பிற்க்கோ ஏது எல்லை ?
உன் பேனாவில்
மை குறையும்போதேல்லாம்
மக்களின் வறுமையும் குறைந்தது
சேலையைப்போல் தார் தாறாய்க்
கிழிந்து கிடந்த சாலைகளை
தாரைக்கொண்டு சோலைகளாய்
மாற்றியவன் நீ
ஏழை மக்கள் உயர
ஏணியாக்கினாய் உன் உடம்பை
அவர் கரைசேர
தோணியாக்கினாய் உன் உயிரை
நீ முதல்வர் நாற்காலியில்
அமர்ந்த நேரத்தைவிட
மக்களோடு அமர்ந்த
நேரமே அதிகம்
இளம் வயதில்
அனைவரும்
பூக்களை நேசித்துக்கொண்டிருக்க
நீ மட்டும்
மக்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்
மாணவர்களுக்கு
காலை உணவாகப் பால்
கொடுத்தாய்
மக்களுக்கு
வேலைக் கனவுடைத்து
உன் தோள் கொடுத்தாய்
மாணவர்களுக்கு
மடிக்கணினி கொடுத்த
கொடிக்கனி நீ
நீ கொடுத்த
மிக்சி பாமரன் சமையலில்
அரைப்பதோ மகிழ்ச்சி
குடிசை வீடெல்லாம்
கல் வீடாக்கினாய்
கல்விக்கு பணம்கொடுத்தாய்
உதவித்தொகை உயர்த்தினாய்
உன்
வெள்ளை அறிக்கையாய்
வெள்ளை அரிசி தந்தாய்
வெள்ளத்தில் ஓடோடி வந்தாய்
மக்கள் உள்ளத்தில் நின்றாய்
மக்கள் முதல்வரே
நீர் மீண்டும் வாகை சூட
வாழ்த்துக்கள்