சூரியனும் வெப்பமும்

நீலநிற துகிலாடை
நீளுகின்ற வானத்தில்
நின்று வெறுப்பேற்றி
தரைஉலர்த்தும் கதிரவனோ

சிறிதேனும் சினங் கொள்வான்
மனிதன் என்றெண்ணி
மேகங்களால் தனை மூடும்
நேரம் தனை பார்த்திருக்கும்

அச்சமயம் காற்று ஓன்று சுழன்றடித்து
வெண் மேகம் கலைத்திடுமே
மீண்டும் இந்த மானிடரோ
கொதிப்படைந்து வெதும்பி நிற்பர்
சுட்டாலும் பட்டாலும்
சூரியனும் வெப்பமும் பூமிக்கு அவசியமே

எழுதியவர் : பாத்திமாமலர் (7-Feb-16, 2:25 pm)
Tanglish : suriyanum veppamum
பார்வை : 197

மேலே