முகம் காட்டா மழைத்துளி

எனக்குள் உட்கார்ந்து
இதிகாசம் எழுதும்
ஓர் மழைத் துளியே

உடைந்துருகி வீழ்ந்த
நட்சத்திரத் துண்டின்
மெல்லொளியில்
உனக்கான முககத்தைத்
தேடுகிறேன்


சிரிக்க சிந்திக்க வைக்க
ஏளனம் செய்ய
ஏமாற்ற எப்படி உன்னால்
மட்டும் முடிகிறது..

உயிரின் ஆள்
கூற்றுத் தளத்தில்
ஓர் ஒற்றைப் புள்ளியில்
துளியாய்
வீழ்ந்து
நதியென நாடி
நாளமெங்கும்
பரவியிய பின்பும்
அறிய முடியாத
அந்த மழைத்துளியின்
முகத்தை ஆவலாகத்
தேடிகொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : சிவநாதன் (7-Feb-16, 5:36 pm)
பார்வை : 93

மேலே