அரக்கா இராட்சசா

மது எனும் மாயையில்
மதி மயங்கிப் போனாயா.....?
''துன்பம் துறக்க - நான்
மதுவுக்கு அடிமை'' என
உனக்கேன் இந்த பேதை எண்ணம்
இப் புவியில் வெறும் மகிழ்வுடன்
வாழ்வோர் எவர்....
அறிவாயா இதை...?
தன்னுடலில் ஒரு சொட்டு
மது ஏற்படுத்திய வலி - தங்காது
தன்னைத்தானே கொட்டியே
உயிர் துறக்குமாம் தேள்....
ஐந்தறிவே கொண்ட இதற்கு - மேல் நீ...
சாதிக்கப் பிறந்தவன்
தினந் தினம் ஏன் நீ
மரணத்தை சுவைத்தே வாழ்கிறாய்...?
ஈசன் படைத்த உடலது...
கேவலம், மது..., மதுவுக்காக
அதை மாய்த்துக்கொள்ள போகிறாயா...?
மண்டையோட்டை ஏன் மதுவால்
கரைக்கின்றாய்?
நிதம் நிதம்.....
உள்ளம் பரிதவித்தே
உயிர் துடிதுடித்தே
மடியப் போகிறாயா?
என்னே....உன் மடமை....
''smoking causes cancer''
''மது மதியை கெடுக்கும்''
''குடி குடியை கெடுக்கும்'
என இரண்டொரு வார்த்தையில்
உன் எதிர்க்காலத்தையே
காட்டித்தந்தும் - நீ
மது வழி நடக்கப் போகிறாயா ?
வெறும் வாசகம் ஒன்றும் வேண்டாம்
உன் மனசாட்சியே போதும்...
நீயும் மடிந்து -உனை
சார்ந்தோரையும் மடியச் செய்கிறாயே ......
இது நியாயமா...... சொல்..
வேண்டாமே, சீரழிவும் சீர்கேடும்....
உன் வாழ்வு நலம் ஓங்க
என் கவி சமர்ப்பணம் ஆகட்டும் !