இரவில் இரவைத் தேடிய தந்தை
இரவில் இரவைத் தேடினார்
பெண் குழந்தை ஒன்றின் தந்தை.
விடியும் வரை விழித்திருக்கும் இரவு
காணாமல் போகவும் கூடுமோ?
இருட்டிய பிறகும்
வீடு வந்து சேராத
தன் செல்ல மகள் இரவைத்தான் தேடினார் இவரும்.
இரவு என்று பெயரா?
அதுவும் அழகான பெண்
குழந்தைக்கா?
இரவுக்குப் பஞ்சமிலலலை
எனதருமைத் தமிழ் நாட்டில்
பகல் நேரத்திலும் பல வீடுகளில்!
நம்பினால் நம்புங்கள்;
நம்ப மறுத்தால்
கூகுலில் தேடிப்பாருங்கள்
நிஷா என்ற இந்திப் பெயருக்கு
இரவு என்ற பொருளும் உண்டு
என்ற உண்மையை அறிய.
உங்கள் இல்லத்திலும்
பகல் நேரத்திலும்
இரவு வேண்டுமென்றால்
பெண் குழந்தை ஒன்றுக்கு
நிஷா என்ற பெயரைச் சூட்டுங்கள்.