அரசியல்வாதிகளின் ஆத்திச்சூடி
அரசியல்வாதிக்கு ஆத்திச்சூடி நகைச்சுவையாய்:
அத்தனைக்கும் ஆசைப்படு
ஆமாம் போடக் கத்துக்கோ
இம்சையை தெரிந்தும் தெரியாம செய்
ஈஸியா திருட பழகு
உண்மையை பொய்யோடு கொஞ்சம் சேரு
ஊரை ஏமாத்த தெரிஞ்சுக்கோ
எல்லோரும் ஏமாற கூடியவர்கள்
(வளர்த்த) ஏணியை எட்டி உதை
ஐந்தாம்படை வேலை செய்
ஒண்ணா இருக்க விடாதே
ஓசியில் உடம்பு வளர்த்துக்கோ
ஔசாரியும் வியாபாரத்துக்கு அவசியம்