தணியாதா காதல்
கட்டி அனைத்து என்னை
கடலிலே தள்ளிவிட்டாய்.
வெட்டி இதயத்தை
கூறுபோட்டு கொன்றுவிட்டாய்.
ஒட்டிஉறவாடி உயிரினில் கலந்துவிட்டாய்.
வட்டிபோட்டு எனக்கு
வேதனையை தந்துவிட்டாய்.
விலக்கிடமுடியாத
உயிரின் பாதியே,
விளக்கடி வலியால்
துடிக்குது மீதியே..
இரும்பென ஆனதா உன் சிறு இதயம்.
நீ இல்லாத என் வாழ்வு
பாழ்பட்டு சிதையும்.
வேர்விட்ட மலராய்
எனக்குள்ளே நீ இருக்க,
வால் கொண்டு வருகிறாய்
வானவில்லை நீ அறுக்க.
சில காலம் வாழ்ந்தாலும்
உயிரில் நீ உறைந்திருக்க.
பல இரவை கடந்துமே
முடியவில்லை உனை மறக்க..

