தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-2

காலம் கடப்பதைக்கண்டு - கண்கள்
கண்ணீர் வடிக்குது அன்பே..!
வடியும் கண்ணீர் கவிதையாகி
இதயத்தை நிறைக்குது அன்பே..!”

இதயம் நிறையும் தருணம்
இன்பம் பெருகுது அன்பே..!
பெருகும் இன்பம் இதுவரை
உபயோகமில்லை அன்பே..!

தென்றல் பாடும் பாட்டில்
இனிமை இல்லையென்று
இன்பம் காணும் கூட்டம்
சொல்வதில்லை அன்பே…!

பூ-வை விட மென்மை,
பாவை மேனியென்று
புலமை பாடும் கூட்டம்
புலம்புவது உண்மை அன்பே..!

கானல் நீரின் அலைகள்
கரை சேரவில்லையென்று
காத்திருக்கும் கண்கள்
கலங்கிப் பயனில்லை அன்பே..!

காதலென்னும் வேதம்
காலமெல்லாம் ஓதும்
காலம் கைகூடும்போது
கரம்பிடிப்பேன் அன்பே..!

வாழை மரத்துக்கு இல்லை
தடுக்கின்ற கணுக்கள்
அதை சோதித்துப் பார்ப்பதில்
நேரம்வீண் அன்பே..!

ஏழைக்கு கிடைப்பதில்லை
நிரந்தரக் கூலி
அவன் வாழ்வுக்கு வழிசெய்ய
முயல்வேன் அன்பே..!

தேர்வுக்குப் படிக்கின்ற
மாணவன்ப் போலே
உன்பெயரை மனனம் செய்து
விழுங்கினேன் அன்பே..!

குகைக்குள் நுழைகின்ற
இரயிலைப் போலே
கூக்குரல் எழுப்பி என்னுணர்வை
முழங்கினேன் அன்பே..!

எழுதியவர் : இரா.மணிமாறன் (11-Feb-16, 10:58 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 80

மேலே