உன் அனுமதியுடன் பெற்றுக் கொண்ட என் இதயம்
நான் உன்னிடம்
விடை பெற்று போகும்
அந்த நொடிகளில்
உதடுகளை குவித்து
முத்தம் தருவதாய்
ஒரு செய்கை செய்கிறாய்
அந்த உதடுகளின்
குவியலின் முத்தத்தில்
மொத்தமாய் உடைந்து
சிதறுகிறது
உன் அனுமதியுடன்
பெற்றுக் கொண்ட
என் இதயம்