புத்தக வாசிப்பு செய்தி --நான் எப்படிப் படிக்கிறேன் - பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்

என் அனுபவத்தில் வாசிப்புக்கும் மேலான சிறப்புடையது மறுவாசிப்பு. ஏற்கெனவே வாசித்த நல்ல புத்தகங்களை மீண்டும் படிக்க நேரும் தருணங்கள் அற்புதமானவை. ஒரே புத்தகம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அனுபவங்களை மறுவாசிப்பில் தரும்.

காலத்தில் உறைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எப்போது எனக்கு உண்டு. ஒரே மேடைப் பேச்சாளனாக, ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களை என் பேச்சின் வழியே கடத்த நினைக்கிறேன். அதற்கு உதவும் மிகச் சிறந்த கருவி வாசிப்பு!

எந்தச் சமூகத்தில் வாசிப்பில்லையோ, அந்தச் சமூகம் தன் காலத்திடமிருந்து தானே பிரிந்து, விலகிக் கிடக்கிறது. ஒரு சமூகம் பாகுபாடுகளற்ற சமூகமாக உருக்கொள்வதற்கு, அந்தச் சமூகம் தெளிந்த நல்லறிவு கொண்ட சமூகமாக இருத்தல் வேண்டும். தெளிந்த நல்லறிவு வாசிப்பிலே இருந்து வருகிறது.

வாசிப்பதென்பது காலத்தை அறிவது.

வாசிப்பதென்பது காலத்தைக் கடப்பது.

எழுதியவர் : (13-Feb-16, 4:13 pm)
பார்வை : 205

சிறந்த கட்டுரைகள்

மேலே