ஹிந்துப் பண்பாடு

ஹிந்துப் பண்பாடு

நேற்றின் மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். பலகோடி மூதாதையரின் உழைப்பால் அமைந்த உலகம் இது. காடு திருத்தி, கழனியாக்கி, வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சி, வரி விதித்து, நாடு காத்து, சமயம் போற்றி, கலைகள் வளர்த்து, பாதுகாப்புக்கு அரண் அமைத்து, சந்ததி பெருக்கி, செல்வம் சேர்த்து,…. நமது முன்னோர் நடை பயின்ற அதே பாதையில் தான் நாமும் நடை பயில்கிறோம். பண்பாடும் அதன் ஓர் அம்சமே.

இன்று நாகரிகம் பேசும் பல நாடுகளில் இழை, தழைகளை உடையாக உடுத்துக்கொண்டு விலங்குகளை கல்லாயுதத்தால் மக்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த காலத்தில், பாரதத்தில் மிக உயர்ந்த பண்பாடு விளங்கி இருக்கிறது. நெசவிலும் கூட எத்தனை நுண்ணிய தொழில்நுட்பங்கள்; ஆயுதங்களில் எத்தனை வகைகள்! இங்கு தான் எத்தனை பண்பட்ட மொழிகள்! அத்தனை மொழிகளிலும் எத்தனை இலக்கியங்கள்!

இன்றுள்ள நாட்டின் சூழலும் உலகச் சூழலும் விரைவில் மாறும் என்பதற்கான சமிக்ஞைகள் தென்படத் துவங்கிவிட்டன. இதைதான் பாரதம் உலக குருவாகும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே கூறிச் சென்றார்.

“மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ….. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” -என்பார் சுவாமி விவேகானந்தர்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய பண்பாட்டை மறந்து பேருந்தில் செல்லும் பெண்ணை பலாத்காரம் செய்யும் காமுகர்களின் நாடாக மாறி வருகிறோம். நமது தர வீழ்ச்சி மிகவும் செங்குத்தானது.

ஹிந்துப் பண்பாட்டின் தற்போதைய நிலை, நன்கு அலங்கரிக்கப்பட்ட நோயாளியின் இதயம் போல துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இன்னமும் இதயம் நிற்காமல் துடிப்பதே நம் முன்னோர் செய்த பெரும் பேறு.

தேசத்தில் தற்போது காணப்படும் சீரழிவுகளைத் தடுக்கத் தேவையான செயல்பாடுகள் தான் தேவை. நமது ஹிந்துப் பண்பாட்டின் பெருமிதம் உணர்த்தப்பட்டாலே குற்றங்கள் குறையும். வேடங்கள் வெளிறும். அதற்கான முனைப்பான பணிகளில் ஈடுபடுவோரே இன்றைய தேவை.

- படித்தது(குறிப்பிட சில பத்திகள் மட்டுமே இணைத்துள்ளேன்)

எழுதியவர் : படித்தது (13-Feb-16, 2:58 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 1148

மேலே