இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை - கார் நாற்பது 33
இன்னிசை வெண்பா
கடனீர் முகந்த கமஞ்சூல் எழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்1
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட! 33
- கார் நாற்பது
பொருளுரை:
கடலினது நீரை முகந்த நிறைந்த சூலினையுடைய மேகம் மேற்கு மலையிடத்து தான் கொண்ட, நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினை யுடைய மொழியை யுடையாளது வருத்தம் நீங்க (மீளுங் காலத்திற்குந்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக)
சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம்; கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத்தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்;

