எண் கணிதக் காதல்

ஏண்டா நீ ஒரு பொண்ணக் காதலிக்கறதாச் சொன்ன, ஆனா, நீ காதலர் தினம் எப்பவும் கொண்டாடினதில்ல இனியும் கொண்டாடமாட்டேன்னு சொல்லற? ஏண்டா அந்தப் பொண்ணு உன்ன வெட்டி விட்டுட்டாளா?

இல்லடா காதலர் தினம் ஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதிதான் வருது. என் எண் கணித சோதிடப்படி 4ஐயும் 1 ஐயும் கூட்டினா 5 வருது. 5 ஆம் நம்பர் எனக்கு ரொம்ப ஆபத்தான நம்பர். எங் காதலியோட் அண்ணன்கள் நாலுபேரும் பெரிய ரவுடிங்க. இந்த விவகாரம் தெரிச்சா என்னோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல.
====
அப்ப தப்பிச்சு ஒதுங்கிப் போடா உன்னோட உயிரைக் காப்பாத்திக்க. இன்னைக்கு ஞாயித்துக் கெழம வேற. நல்ல நாள் இல்ல. நாய் படாத பாடு படவேண்டாம்டா காதல் இளவரசா.

எழுதியவர் : மலர் (14-Feb-16, 12:50 am)
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே