உன்னை பார்த்த பின்
மறதிப் பிணியிலே விழுந்தேன்;
நித்திரை அன்று சொர்ப்பனம் கண்டேன்;
புசிக்க மறந்தும் பசி தீர்ந்தேன்;
வாழும் இஞ்ஞாலத்தை மறந்தேன்!
வெற்றுப்பாறையில் சிற்பங் கண்டேன்;
விண்மீன்கள் மத்தியில் சித்திரம் புனைந்தேன்;
காக்கை கரையினில் கவிதைக் கேட்டேன்;
கார்பருவ இடியினுள் இராகத்தை இரசித்தேன்!
பரிதியும் தரணியை சுற்றுமோ?
முதுவேனிலும் பனிக்காற்றை வீசுமோ? – வான்மதியும்
நண்பகலில் தோன்றுமோ? அன்றிவை
உன்னை கண்டபின் ஏற்பட்ட மயக்குமோ?