என் வாழ்வில் திருக்குறள், அப்துல் கலாம், இறுதி எழுத்துக்கள் தொடர், ஞான ரத்தினங்கள்

குறள்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு (122)

பொருள்:

அடக்கம் என்னும் பண்பை ஒரு செல்வம் போல் பேணிக் காக்க வேண்டும். மனிதர்களுக்கு அதைவிடச் சிறந்த நன்மை இல்லை. மனம், சொல், செயல் ஆகிய மூன்றையும் கட்டுபடுத்தி வாழ வேண்டும். அவ்விதம் அடங்கி வாழ்தலே ஆக்கம் பெருக்குவதற்கு வழியாகும்.

விளக்கம்:

முன்னொரு காலத்தில் இரண்டு அரசர்கள் இருந்தனர். ஒருவருடைய ஆட்சியானது சண்டை, சச்சரவு, குழப்பங்களுக்குப் பேர்போனது. தனது அரசின் அவலநிலைமையைக் கண்டு மனம் நொந்த அந்த அரசர், மற்றவரின் நாட்டுக்குப் போனார். ‘உங்கள் நாட்டில் அவலநிலை உண்டா?’ என வினவினார். அவர் ’இல்லை’ என்றார். அப்படியா ‘எனது ஆட்சியில் நாட்டின் அவல நிலையை என்னால் மாற்றவே முடியவில்லை. உங்களுடைய நாடு செழுமையாக இருப்பதற்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தார். அந்த அரசர் சொன்னார்: ‘என் ஆட்சியை நான்கு பேர் காவல் காக்கிறார்கள். முதல் காவலாளி உண்மை. எனது நாட்டின் எந்தக் குடிமகனும் அதர்மக் காரியங்களிலோ, அறமற்றச் செயல்பாடுகளிலோ சிறிதுகூட ஈடுபடுவதே இல்லை. இரண்டாவது காவலாளி நீதி. என் நாட்டில் எவருமே நீதி வழுவுவதில்லை. மூன்றாவது காவலாளி அன்பு. மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், இனிமையுடனும் பழகுகின்றனர். எனவே ஆக்கிரமிப்போ சுரண்டலோ இல்லை. நான்காவது காவலாளி மிக மிக முக்கியமானவர். அவரது பெயர் தியாகம். மக்கள் அனைவரும் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்கள். என் நாட்டில் சுயநலத்துக்கு சுத்தமாக இடமே இல்லை’’’ என்றார்.

எழுதியவர் : (14-Feb-16, 10:23 pm)
பார்வை : 89

மேலே