துடிக்கிறேன் தரையில் விழுந்த மீனாய் 555

அன்பே...

விழுந்து எழும் அலைகள்கூட
கரையை தொடாமல் செல்வதில்லை...

பாறையை மோதிவிட்டு
செல்லும் அலைகள்...

சில துளிகளை என்மீது
வீசிவிட்டு செல்கிறது...

இதமாக வீசும் தென்றல்கூட
உனக்குள் சென்று திரும்புகிறது...

உன்னையே தொடர்ந்து வரேன்
உன் மனதை தொட்டுவிடலாம் என்று...

யாருக்கும் தெரியாமல் உன்மீது
காதல் கொண்ட நான் மட்டும்...

உன் அன்பு கிடைக்காமல்
துடித்தேன்...

இன்று நீ வேறொருவர்
மனைவி...

உன்னை மறக்க முடியாமல்
துடிக்கிறேன்...

தரையில் விழுந்த
மீனைப்போல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Feb-16, 8:14 pm)
பார்வை : 1119

மேலே