அற்புத விரலிடைத் தூரிகைகள்

~~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
சின்ன வயதில் படித்த
படம் பார்த்து கதை கூறல் போல
ஓவியர்களின் கைரேகைகளின்
எச்சங்களை எப்படியோ
மோப்பம் பிடித்து
உணர்வோட்டம் கொடுக்கும்
என் வில்லங்க வரிகள். .!
விமர்சனப் பிரிவின்
சிம்மாசனமேறும்
தலைமைப் பீடங்கள் ..!
எவ்வாறெனினும் அவை
ஏனோ ஒரு கணத்தின் பாரத்தை
உணர்வில் குளிர்த்தும். .!
ஆனாலும் நிழலொன்று
களவாடி விடுவேன் அதில்
ஓர் ஆத்ம திருப்தி...!
இந்த காட்டுச்செடிகளும்
விருந்தளிக்கும் வாசனையை
வர்ணங்கள் தூவும்..!
கதை கவிதை என எந்தவொரு
மனித சிருஷ்டியையும் விட
ஓவியங்கள்
ஒரு கூட்டத்தின் இடுக்குகளினூடே
ஊடுருவி பிரதிபலிக்கும்
உற்பத்தி மையங்கள்..!
அதே பிரகாசத்தை
அதே உணர்வை
அதே அம்சத்தை
அதே அழகை
வெறும் மௌனங்களால்
கொடுத்து விட்டுப் போகிறது
அற்புத விரலிடைத் தூரிகைகள்....!
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 5:45 am)
பார்வை : 77

மேலே