நீதியுணர்வின் செம்மத்தில்----

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
பகிரங்கமாக
சொல்லொணாதோர் ரகசியம்
பேரண்டத்தையே தகர்த்தெறியும்
சில சமிக்ஞைகள்
நிலை தடுமாறி மேல் நோக்கி
உயர்ந்த ஆர்வக் கைகள்
தலைமுறைகளை அழித்துச்
சுவைத்த கோளாறுகள்
என்ன தான் ஆனாலும்
நானும் நீயும்
நகர்ந்து கொண்டே இருக்கும்
தண்டவாளங்களின்
எல்லைப்புள்ளிகள். .....
புரிந்து கொள்ளலும் அன்பும்
எங்கும் எப்போதும் கிட்டும்
சம அந்தஸ்துடைய இரண்டுக்கும்
இடையில்
நீதியுணர்வின் செம்மத்திற்காய்
மத்தியில் நகர்ந்து கொண்டிருக்கும்
ஒரு சிதறாத முழு நிலா போல
சின்னா பின்னமாகும்
ஒளிக்கீற்றுக்களாய் வந்து வந்து
ஒளிர்த்திக் கொண்டிருக்கிறது !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 5:58 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 59

மேலே